search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாய்
    X
    நாய்

    இந்த மாநகராட்சி பகுதியில் நாய், பூனை வளர்க்க கட்டணம் நிர்ணயம்

    மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் நாய், பூனை மற்றும் கால்நடைகள் யாருக்கு சொந்தமானது என்பதை எளிதில் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த திட்டம் வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அதிக அளவில் கால்நடைகள் மற்றும் நாய், பூனை வகைகள் குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கால்நடைகள் வளர்க்கவும், செல்ல பிராணிகளை அழைத்து செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என கொச்சி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த கோர்ட்டு கேரளாவில் உள்ள அனைத்து செல்ல பிராணிகளையும், கால்நடைகளையும் மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் கணக்கெடுத்து அவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதோடு செல்ல பிராணிகள் வளர்ப்போர் அதற்கான கட்டணத்தை செலுத்தி லைசென்ஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தது.

    பூனை

    இதையடுத்து கோழிக்கோடு மாநகராட்சி கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த முதற்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி கோழிக்கோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நாய் வளர்ப்போர் ரூ.500 கட்டணம் செலுத்தி லைசென்ஸ் பெற வேண்டும் என கூறியுள்ளது.

    இதுபோல பூனை வளர்க்க அதன் உரிமையாளர் ரூ.100 செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது. இத்திட்டத்தின் மூலம் கோழிக்கோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கால்நடைகளை எளிதில் கணக்கிட முடியும் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.

    மேலும் இந்த திட்டம் அமலுக்கு வந்தால் மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் நாய், பூனை மற்றும் கால்நடைகள் யாருக்கு சொந்தமானது என்பதை எளிதில் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபற்றி கோழிக்கோடு மாநகராட்சியின் கால்நடை துறை அதிகாரி ஸ்ரீஸ்மா கூறும்போது, இந்த திட்டம் குறித்து கோழிக்கோடு மாநராட்சி கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்ற உள்ளோம். அனைத்து கவுன்சிலர்களும் ஏற்றுக்கொண்டால் இத்திட்டம் உடனடியாக அமலுக்கு வரும், என்றார்.


    Next Story
    ×