search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகே சிவக்குமார்
    X
    டிகே சிவக்குமார்

    நாங்கள் எந்த கட்சியையும் உடைக்க மாட்டோம்: டி.கே.சிவக்குமார்

    கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு ஒரு புதிய திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. விலைவாசி உயர்வு, மக்கள் விரோத கொள்கை போன்றவற்றால் பா.ஜனதா மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
    பெங்களூரு :

    பெங்களூரு சஞ்சய்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் நேற்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். இதில் டி.கே, .சிவக்குமார் பேசியதாவது:-

    நாங்கள் எந்த கட்சியையும் உடைக்க மாட்டோம். ஆனால் பிற கட்சியினர் தாமாக முன்வந்து எங்கள் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தால் அவர்களை சேர்த்து கொள்வோம். காங்கிரசை சேர்ந்த 20 எம், .எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர விரும்புவதாக நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.

    20 எம்.எல்.ஏ.க்கள் அல்ல 40 எம்.எல்.ஏ.க்களை சேர்த்து கொள்ளுங்கள். அதற்கு எங்களின் ஆட்சேபனை கிடையாது. காங்கிரஸ் கட்சியை யாரும் எதுவும் செய்ய முடியாது. வருகிற 20223-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்திருந்தால் எடியூரப்பாவை பா.ஜனதா மாற்றியது ஏன்?. மத்திய-மாநில அரசுகள் அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துவிட்டன. கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு ஒரு புதிய திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. விலைவாசி உயர்வு, மக்கள் விரோத கொள்கை போன்றவற்றால் பா.ஜனதா மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.
    Next Story
    ×