search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    இந்தியாவில் இதுவரை 22.52 கோடி பேருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி

    கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து போராடும் இந்தியா, தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்தி வருகிறது.
    புதுடெல்லி :

    கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து போராடும் இந்தியா, தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்தி வருகிறது.

    கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்கியது. தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 8 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், இதுவரையில் 85 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரத்து 527 ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 63 கோடியே 8 லட்சத்து 31 ஆயிரத்து 85 பேருக்கு ஒரு ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2 ‘டோஸ்’ தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 22 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரத்து 442 ஆகும்.

    நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 68 லட்சத்து 42 ஆயிரத்து 786 ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 34 லட்சத்து 63 ஆயிரத்து 907 பேர் முதல் ‘டோஸ்’ போட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 33 லட்சத்து 78 ஆயிரத்து 879 ஆகும்.

    இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×