search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமிதாப் பச்சன்
    X
    அமிதாப் பச்சன்

    பான் மசாலா விளம்பரத்திலிருந்து விலகவேண்டும் - அமிதாப் பச்சனுக்கு கோரிக்கை

    பான் மசாலாவை விளம்பரப்படுத்தும் விளம்பர படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு தேசிய புகையிலை எதிர்ப்பு அமைப்பு அமிதாப் பச்சனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    புகையிலை ஒழிப்புக்கான தேசிய அமைப்பின் தலைவர் சேகர் சால்கர், அமிதாப் பச்சனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    புகையிலை மற்றும் பான் மசாலா பழக்கம் குடிமக்களின் ஆரோக்கியத்திற்கு எதிராக இருக்கிறது என்பதை மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் நிரூபித்துள்ளது. 

    பான் மசாலா நேரடியாக புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஒன்றாகும். இது வாய்ப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகிறது.

    புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (ஐஏஆர்சி) மற்றும் உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) ஆகியவை பான் மசாலா மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்துகின்றன என்பதற்கான அறிவியல் சான்றுகளை ஏற்றுக்கொள்கிறது.

    சிகரெட் மற்றும் புகையிலை நிறுவனங்களின் இலக்காக தற்போது மாணவர்கள் மாறிவிட்டனர். என்ஜிஓவின் உறுப்பினர் மற்றும் புற்றுநோயியல் நிபுணர் எனும் முறையில் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். 

    மேலும், பல்ஸ் போலியோ பிரசாரத்திற்கான அரசாங்க பிராண்ட் அம்பாசிடராகவும் அமிதாப் பச்சன் இருப்பதால், அவர் விரைவில் பான் மசாலா விளம்பரங்களில் இருந்து விலக வேண்டும். இந்த நடவடிக்கை இளைஞர்கள் புகையிலைக்கு அடிமையாகிவிடாமல் தடுக்க உதவும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×