search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ள பகுதி
    X
    தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ள பகுதி

    புயல் சின்னம்... அரசு ஊழியர்களின் விடுப்பை அக். 5ம் தேதி வரை ரத்து செய்தது மேற்கு வங்காள அரசு

    குலாப் புயல் காரணமாக மேற்கு வங்காள மாநிலத்தின் கடலோர பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இன்று காலை ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கில் 510 கிலோ மீட்டர் தொலைவிலும், கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கு, வடகிழக்கில் 590 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டிருந்தது. 

    மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு “குலாப்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தீவிர புயலாக வலுப்பெற்று நாளை மாலை (26-ந்தேதி) விசாகப்பட்டினம்-கோபால்பூருக்கும் இடையே வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் காரணமாக ஒடிசா மற்றும் ஆந்திராவில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தெலுங்கானா, ஒடிசாவின் வடக்கு உள்மாவட்டங்கள் மற்றும் சத்தீஸ்கரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் திங்கட்கிழமை வரை கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    புயல் காரணமாக மேற்கு வங்காள மாநிலத்தின் கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்கிறது. தொடர்ந்து கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. மீனவர்கள் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலிலும், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு ஆந்திர கடற்பகுதிகளுக்கும் செப்டம்பர் 27ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

    மேற்கு வங்காளத்திலும் புயலின் தாக்கம் இருப்பதால் அரசு ஊழியர்களின் விடுப்பு அக்டோபர் 5ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ளவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×