search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விதிகளை மீறியதால் பீர் நிறுவனங்களுக்கு ரூ. 873 கோடி அபராதம் - இந்திய போட்டி ஆணையம் நடவடிக்கை

    2009 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நடந்த விலை மற்றும் வினியோகத்தில் விதிகளை மீறி செயல்பட்டது தொடர்பாக இந்திய போட்டி ஆணையம் விசாரணை நடத்தியது.

    புதுடெல்லி:

    கார்ப்பரேட் விவகார அமைச்சகத்துக்குள் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான இந்திய போட்டி ஆணையம் (சி.சி.ஐ.)சந்தையில் போட்டியை ஊக்குவிப்பதற்காகவும் அதில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்திய போட்டி ஆணையம் பீர் நிறுவனங்களுக்கு விதிகளை மீறியது தொடர்பாக ரூ. 873 கோடி அபராதம் விதித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா உள்பட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பீரின் விலை மற்றும் வினியோகத்தில் விதிகளை மீறி செயல்பட்டது தொடர்பாக யுனைடெட் ப்ரூவரிஸ் லிமிடெட், கார்ல்ஸ்பெர்க் இந்தியா, ஆல் இந்தியா ப்ரூவர்ஸ் அசோசியே‌ஷன் ஆகியவை மீது குற்றச்சாட்டு இருந்தது.

    2009 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நடந்த விலை மற்றும் வினியோகத்தில் விதிகளை மீறி செயல்பட்டது தொடர்பாக இந்திய போட்டி ஆணையம் விசாரணை நடத்தியது.

    இந்திய போட்டி ஆணையம்

    பீர் விற்பனை மற்றும் வினியோகத்தில் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து விலை மாற்றம் உள்ளிட்ட விதிகளை மீறி செயல்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இது நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் நடந்து வந்த இந்த விசாரணை முடிவடைந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறியதற்காக யுனைடெட் ப்ரூவரிஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 852 கோடியும், கார்ல்ஸ்பெர்க் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 121 கோடியும் அபராதம் விதித்துள்ளது.

    இதையும் படியுங்கள்...குற்றங்கள் செய்தால் அந்த தண்டனை உறுதி- தலிபான்களின் அதிர்ச்சி அறிவிப்பு

    Next Story
    ×