search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டிய கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட்
    X
    மராட்டிய கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட்

    மகாராஷ்டிராவில் அக்டோபர் 4-ந்தேதியில் இருந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த மாதம் 4-ந்தேதியில் இருந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.
    கொரோனா 2-வது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தபோதிலும், மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பள்ளிகளை திறந்து வருகின்றன.

    அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த மாதம் 4-ந்தேதியில் இருந்து பள்ளிகளை திறக்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அனுமதி அளித்துள்ளதாக, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘அக்டோபர் 4-ல் இருந்து பள்ளிகள் திறக்கப்படும். இதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அனுமதி அளித்துள்ளார். கொரோனா பணிக்குழு, சுகாதாரத்துறை ஆகியவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    கிராமப்புற பகுதிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். நகர்ப்புறங்களில் 8 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும். அரசு மீண்டும் பள்ளிக்கு குழந்தைகள் வருவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அந்தந்த பகுதி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    பெற்றோர்களின் ஒப்புதலுடன்தான் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும். எந்தவொரு நலத்திட்டம் மற்றும் தேர்விற்கு வருகைப் பதிவேடு கட்டாயம் கிடையாது. ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் மூலமாகவும் கல்வி கற்கலாம். எங்களுடைய பாடங்கள் யூடியூபில் கூட உள்ளன’’ என்றார்.
    Next Story
    ×