search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 26,964 பேருக்கு தொற்று

    கொரோனா காரணமாக கேரளாவில் 214, மகாராஷ்டிராவில் 70 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 383 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,45,768 ஆக உயர்ந்தது.
    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 35 லட்சத்து 31 ஆயிரத்து 498 ஆக உயர்ந்தது.

    நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 15,768, மகாராஷ்டிராவில் 3,131, தமிழ்நாட்டில் 1,647, மிசோரத்தில் 1,355, ஆந்திராவில் 1,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 30 ஆயிரமாக இருந்த நிலையில், படிப்படியாக குறைந்து கடந்த 2 நாட்களாக 16 ஆயிரத்திற்குள் உள்ளது.

    அதேநேரம் வடகிழக்கு மாநிலமாக மிசோரத்தில் தினசரி பாதிப்பு 500-க்குள் இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்தது. நேற்று 1,300-ஐ தாண்டி இருக்கிறது. நேற்று கேரளா, மகாராஷ்டிரா, தமிழகத்துக்கு அடுத்த 4-வது அதிக பாதிப்பு மிசோரத்தில் ஏற்பட்டுள்ளது.

    கொரோனா காரணமாக கேரளாவில் 214, மகாராஷ்டிராவில் 70 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 383 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,45,768 ஆக உயர்ந்தது.

    இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,38,616, கர்நாடகாவில் 37,648, தமிழ்நாட்டில் 35,379 பேர் அடங்குவர்.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட நாள்தோறும் குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்தவகையில் நேற்று கொரோனாவின் பிடியில் இருந்து 34,167 பேர் மீண்டு வீடு திரும்பினர்.

    இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 83 ஆயிரத்து 741 ஆக உயர்ந்தது. தற்போது 3,01,989 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 6 மாதத்தில் இல்லாத அளவு குறைவு ஆகும்.

    கோப்புப்படம்


    நாடு முழுவதும் நேற்று 75,57,529 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 82 கோடியே 65 லட்சமாக உயர்ந்தது.

    இதற்கிடையே நேற்று 15,92,395 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 55.67 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


    Next Story
    ×