search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெகபூபா முப்தி
    X
    மெகபூபா முப்தி

    தலிபான்கள் குறித்து பேசும் மத்திய அரசு, விவசாயிகள் பற்றி பேசுவதில்லை: மெகபூபா முப்தி

    ஜம்மு-காஷ்மீரில் தற்போது சர்தார்கள் என்றால் காலிஸ்தானி, நாங்கள் பாகிஸ்தான், பா.ஜனதா மட்டுமே இந்துஸ்தானி என மெகபூபா முப்தி விமர்சனம் செய்துள்ளார்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்ற மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. தேர்தல் நடப்பதற்காக எல்லை வரையறை நடைபெற்று வருகிறது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மெகபூபா முப்தி கூறுகையில் ‘‘டெல்லியில் உள்ளவர்கள் ஜம்மு-காஷ்மீரை ஆய்வமாக பயன்படுத்தி சோதனை செய்கிறார்கள். நேரு, வாஜ்பாய் போன்ற தலைவர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் குறித்த முன்னேற்ற பார்வை இருந்தது. ஆனால், இந்த அரசு இந்து முஸ்லிம் என பிளவுப்படுத்துகிறது. சர்தார்கள் தற்போது காலிஸ்தானி, நாங்கள் பாகிஸ்தான், பா.ஜனதா மட்டும்தான் இந்துஸ்தானி.

    எல்லை நிர்ணயப் பயிற்சி தற்செயலாக செய்யப்படுகிறது. உயிரிழந்தவர்களின் பெயர்களை பள்ளிக் கூடத்திற்கு வைக்கிறார்கள். அவர்கள் பெயரை மட்டுமே மாற்றுகிறார்கள். ஆனால் பெயர் மாற்றத்தால் குழந்தைகள் வேலைவாய்ப்பை பெறவில்லை.

    மத்திய அரசு ஆப்கானிஸ்தானின் தலிபான் பற்றி பேசுகிறது. ஆனால் விவசாயிகள், வேலையின்மை பற்றி பேசுவதில்லை’’ என்றார்.
    Next Story
    ×