என் மலர்

  செய்திகள்

  சோனு சூட்
  X
  சோனு சூட்

  அவர்களுடைய வேலைகளை செய்யட்டும்: என்னுடைய வேலையை நான் செய்கிறேன்- சோதனை குறித்து சோனு சூட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட் நடிகர் சோனு சூட் உடன் தொடர்புடைய ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
  மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் வசிப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் (வயது 48). இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் மும்பை உட்பட பல இடங்களில் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவினார். இதன் வாயிலாக தேசிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

  இதற்கிடையில் மும்பை மற்றும் லக்னோவில் நடிகர் சோனு சூட் உடன் தொடர்புடைய ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 15-ம் தேதி சோதனை நடத்தினர். ரியல் எஸ்டேட் தொழில் ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், நடிகர் மற்றும் அவரது கூட்டாளிகளின் இடங்களில் நடந்த சோதனையின் போது, அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுவரை 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சோனு சூட் போலியான நிறுவனங்களிடம் இருந்து போலியாக கடன் வாங்கி கணக்கில் வராத சொத்து சேர்த்து உள்ளார் எனத் தெரிவித்தனர்.

  இந்த நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனைக் குறித்து சோனு சூட் பதில் அளிக்கையில் ‘‘எல்லோருக்கும் முன்பாகத்தான் எல்லாம் செயல்பட்டுள்ளது. நாங்கள் ஒவ்வொருவருக்கும் எல்லா விவரங்களையும் கொடுத்துள்ளோம். அவர்கள் அவர்களுடைய வேலைகளை செய்யட்டும். நான் என்னுடைய வேலையை செய்கிறேன்.

  நீங்கள் அழைத்தால் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாபுக்கு தூதராவேன். நாங்கள் நாடு முழுவதும் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறோம். நான் அவர்களுக்காக அங்கே இருக்கிறேன். ஒரு சிறு தொகை கூட என்னுடைய வங்கி கணக்கிற்கு அறக்கட்டளையில் இருந்து வரவில்லை’’ என்றார்.
  Next Story
  ×