என் மலர்

  செய்திகள்

  வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்
  X
  வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்

  உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு- வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளூர் நிர்வாகம் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடங்கி உள்ளதாக முதல்வர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்தார்.
  டேராடூன்:

  உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இன்று மேகவெடிப்பு காரணமாக, திடீரென இடி மின்னலுடன் பெருமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின. நிலச்சரிவினால் பாலங்கள், சாலைகள் மண்ணில் புதைந்தன.

  பங்கதி கிராமத்தில் சாலைப்பணி மேற்கொண்டுள்ள தொழிலாளர்களின் தற்காலிக கூடாரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.  

  உள்ளூர் நிர்வாகம் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடங்கி உள்ளதாக முதல்வர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்தார்.

  உத்தரகாண்ட் மாநிலத்தில், தொடர்ச்சியான மலைகளை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் இதுபோன்று அவ்வப்போது மேகவெடிப்பு ஏற்படுகிறது. 
  Next Story
  ×