என் மலர்

  செய்திகள்

  ராகுல் காந்தி
  X
  ராகுல் காந்தி

  ராகுல்காந்தி பற்றிய விமர்சனம்: திரிணாமுல் காங்கிரசுக்கு காங்கிரஸ் பதிலடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிற கட்சிகளின் தலைவர்களை இழிவுபடுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை கட்டி எழுப்ப முடியாது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
  புதுடெல்லி:

  2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பாடுபட்டு வருகிறார். இதற்காக சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான ஜகோ பங்க்ளாவில் ராகுல்காந்தியை விமர்சித்து ஒரு அட்டைப்பட கட்டுரை வெளியாகி இருந்தது. அதில், அக்கட்சியின் மக்களவை தலைவர் சுதிப் பந்தோபாத்யாயா கருத்தும் இடம்பெற்று இருந்தது.

  “பிரதமர் மோடிக்கு மாற்று சக்தியாக உருவெடுக்க ராகுல்காந்தி தவறி விட்டார். ஆனால், மம்தா பானர்ஜி மாற்று சக்தியாக வெற்றி பெற்று விட்டார். அவர்தான் எதிர்க்கட்சிகளின் பொதுவான முகமாக மாற வேண்டும்“ என்று அவர் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி நேற்று பதிலடி கொடுத்தது. அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

  ரந்தீப் சுர்ஜேவாலா

  ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும் மாபெரும் போராட்டத்தை ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் நடத்தி வருகின்றனர். எனவே, ராகுல்காந்தி மீதான தாக்குதல், தேவையற்றது, மலிவான ரசனை என்று கருதுகிறோம். எல்லா கட்சிகளையும், அவற்றின் தலைமையையும் மதிக்கிறோம். ஆனால், பிற கட்சிகளின் தலைவர்களை இழிவுபடுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை கட்டி எழுப்ப முடியாது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றுமைக்கு வேட்டு வைக்கக்கூடாது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×