என் மலர்

  செய்திகள்

  எல் முருகன்
  X
  எல் முருகன்

  மத்திய மந்திரி எல்.முருகன் ம.பி.யில் இருந்து எம்.பி. ஆகிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோடி முதல் முறை பிரதமராக இருந்தபோது தமிழக பா.ஜனதா மூத்த தலைவரும், தற்போதைய மணிப்பூர் கவர்னருமான இல.கணேசன் ம.பி.யில் இருந்து எம்.பி. ஆனார்.
  சென்னை:

  தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த எல்.முருகன் சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

  மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்ட எல்.முருகன் 6 மாதங்களுக்குள் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

  புதுவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. இந்த இடத்துக்கு பா.ஜனதா போட்டியிட விரும்புகிறது. எனவே எல்.முருகன் அங்கிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கருதப்பட்டது.

  ஆனால் இப்போது எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார். அந்த மாநிலத்தில் டெல்லி மேல்-சபைக்கு இரண்டு இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

  பாஜக

  இதில் ஒரு இடத்துக்கு வேட்பாளராக மத்திய மந்திரி எல்.முருகனை பா.ஜனதா தலைமை அறிவித்துள்ளது.

  மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்தபோது அந்த கூட்டணியில் இருந்த திருநாவுக்கரசர் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

  அதன் பிறகு மோடி முதல் முறை பிரதமராக இருந்தபோது தமிழக பா.ஜனதா மூத்த தலைவரும், தற்போதைய மணிப்பூர் கவர்னருமான இல.கணேசன் ம.பி.யில் இருந்து எம்.பி. ஆனார்.

  எல்.முருகன் ம.பி.யில் இருந்து தேர்வு செய்யப்படும் 3-வது தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Next Story
  ×