என் மலர்

  செய்திகள்

  தடுப்பூசி போடும் பணி
  X
  தடுப்பூசி போடும் பணி

  பிரதமர் மோடி பிறந்தநாளில் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று 2 கோடி தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டுவருகிறது.
  புதுடெல்லி:

  பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாளையொட்டி பாரதிய ஜனதா சார்பில் 20 நாட்கள் சேவை மற்றும் அர்ப்பணிப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் 8 லட்சம் தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

  குறிப்பாக மோடியின் பிறந்த நாளான இன்று ஒரே நாளில் 2 கோடி தடுப்பூசி செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை இலக்காக நிர்ணயித்துள்ளது.

  பிரதமர் மோடி

  அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி இன்று தீவிரமாக நடைபெறுகிறது. பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி இன்று ஒரே நாளில் 1.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று இரவுக்குள் 2 கோடி என்ற இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

  இதற்கு முன்பு ஒரே நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 1.33 கோடியாக இருந்தது. இன்று அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×