என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  மோடி பிறந்த நாளையொட்டி 20 நாட்கள் தீவிர தடுப்பூசி திட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று 2 கோடி தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 75 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

  இன்னும் அதிக மக்களுக்கு தடுப்பூசி போட்டு சாதனை நிகழ்த்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

  இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாளையொட்டி பாரதிய ஜனதா சார்பில் 20 நாட்கள் சேவை மற்றும் அர்ப்பணிப்பு தினமாக கொண்டாடுகிறார்கள்.

  பிரதமர் மோடி


  இந்த 20 நாட்களும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொள்கிறார்கள். அதில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்துவது தடுப்பூசி மையங்களுக்கு அதிகளவில் ஆட்களை அழைத்து செல்வது போன்றவையும் அடங்கும்.

  இதற்காக நாடு முழுவதும் 8 லட்சம் தொண்டர்களுக்கு பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். மோடியின் பிறந்த நாளான இன்று 2 கோடி  தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி இன்று தீவிரமாக நடத்தப்பட்டது. இது போல் 20 நாட்கள் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்த உள்ளனர்.


  Next Story
  ×