என் மலர்

  செய்திகள்

  ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனைக் கூட்டம்
  X
  ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனைக் கூட்டம்

  பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருமா? -45வது கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு லக்னோவில் இன்று நேரடியாக நடத்தப்படுகிறது.
  லக்னோ:

  உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது.  கொரோனா பரவல் காரணமாக காணொளி வாயிலாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நேரடியாக இன்று கூட்டம் நடைபெறுகிறது.

  நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில்,  அத்யாவசிய பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. மேலும், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
  Next Story
  ×