என் மலர்

  செய்திகள்

  பதவி ஏற்பு விழா
  X
  பதவி ஏற்பு விழா

  குஜராத் மாநிலத்தில் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் பதிவி ஏற்ற நிலையில், 24 பேர் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளனர்.
  குஜராத் மாநிலத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர பட்டேல் கடந்த திங்கட்கிழமை பதவி ஏற்றார். அவருடன் வேறு யாரும் மந்திரியாக பதவி ஏற்கவில்லை. இந்த நிலையில் இன்று மந்திரிகள் பதவி ஏற்றனர். 24 பேர் பூபேந்திர பட்டேல் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  அவர்களுக்கு குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மந்திரி சபையில் முன்னாள் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி இடம்பிடித்துள்ளார்.

  அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முதல்வர் மாற்றப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 99 இடங்களில் வெற்றி பெற்றது. 182 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 77 இடங்கள் கிடைத்தன.
  Next Story
  ×