search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 30,570 பேருக்கு தொற்று

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 208, மகாராஷ்டிராவில் 56 பேர் உள்பட 431 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,43,928 ஆக உயர்ந்தது.
    புதுடெல்லி:

    மத்திய சுகாதார துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்தபாதிப்பு 3 கோடியே 33 லட்சத்து 47 ஆயிரத்து 325 ஆக உயர்ந்தது.

    நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 17,681 பேரும், மகாராஷ்டிராவில் 3,783 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் 1,658, ஆந்திராவில் 1,445, கர்நாடகாவில் 1,116, மிசோரத்தில் 1,402 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    நோய் பாதிப்பால் கேரளாவில் 208, மகாராஷ்டிராவில் 56 பேர் உள்பட 431 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,43,928 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,38,277 பேர் அடங்குவர்.

    கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 38,303 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரத்து 474 ஆக உயர்ந்தது.

    தற்போது 3,42,923 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கோப்புப்படம்

    நாடு முழுவதும் நேற்று 64,51,423 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 76 கோடியே 57 லட்சத்தை கடந்துள்ளது.

    இதற்கிடையே நேற்று 15,79,761 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×