search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான நிலையத்தில் தேங்கிய மழை வெள்ளம்
    X
    விமான நிலையத்தில் தேங்கிய மழை வெள்ளம்

    வரலாறு காணாத கனமழை- வெள்ளக்காடாக காட்சியளித்த டெல்லி விமான நிலையம்

    டெல்லியில் 2010ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பருவமழை காலத்தில் பெய்த மழை அளவு 1000 மில்லி மீட்டரை தாண்டியிருக்கிறது.
    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. 

    இந்த பருவமழை சீசனில் சாதனை அளவாக இதுவரை 1005.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 2010ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பருவமழை காலத்தில் பெய்த மழை அளவு 1000 மில்லி மீட்டரை தாண்டியிருக்கிறது. தொடர்ந்து டெல்லியில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக டெல்லி இந்திராகாந்தி விமான நிலைய வளாகம் வெள்ளக்காடாக மாறியது. விமானங்களை நிறுத்தி வைத்திருந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. மோசமான வானிலை காரணமாக  விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

    திடீரென கனமழை பெய்ததால் விமான நிலைய வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்ததாகவும், விமான நிலைய குழுவினர் உடனடியாக செயல்பட்டு நிலைமையை சரி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×