search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் புதிதாக 33,376 பேருக்கு கொரோனா

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 177 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 308 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,42,317 ஆக உயர்ந்தது.
    புதுடெல்லி:

    மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,376 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 32 லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக உயர்ந்தது.

    நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 25,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விபரம் மத்திய சுகாதாரத்துறை பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் 1,631, ஆந்திராவில் 1,608 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 177 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 308 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,42,317 ஆக உயர்ந்தது.

    இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 1,38,061 பேர் அடங்குவர்.

    கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 32,198 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது 3,91,516 பேர் ஆஸ்பத்திரிகளில் சிசிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோப்புப்படம்


    நேற்று ஒரே நாளில் 65,27,175 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

    இதுவரை மொத்தம் 73 கோடியே 5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் 15,92,135 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை 54.01 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


    Next Story
    ×