search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள முதல்வர் பினராயி விஜயன்
    X
    கேரள முதல்வர் பினராயி விஜயன்

    கேரளாவில் இன்று 25,010 பேருக்கு கொரோனா பாதிப்பு -முதல்வர் தகவல்

    கேரளாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், இது குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை நடத்துவதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், கேரளாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. கொரோனா பாதிப்புடன் நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கேரளாவில் இன்று 25010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிப்பு விகிதம் 16.35 சதவீதமாக இருப்பதாகவும் மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் 177 பேர் பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் 2,37,643 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    கொரோனா தொற்று மற்றும் நிபா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல் நீடிப்பதால், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், இது குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை நடத்துவதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×