search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள்
    X
    பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள்

    அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்-. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

    பிரிக்ஸ் கூட்டமைப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
    புதுடெல்லி:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெறுகிறது. 2012 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது முறையாக இந்த ஆண்டின் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. 

    ‘பிரிக்ஸ்' உச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் பேசுகையில், பிரிக்ஸ் தலைமையின் போது இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:

    இந்த உச்சி மாநாட்டிற்கு இந்தியா தேர்ந்தெடுத்துள்ள கருப்பொருள், ‘தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான பிரிக்ஸ் உள் ஒத்துழைப்பு’  ஆகும். இவை பிரிக்ஸ் கூட்டாண்மையின் அடிப்படைக் கொள்கைகள். பிரிக்ஸ் கூட்டமைப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தியா தேர்ந்தெடுத்த கருப்பொருள், இந்த முன்னுரிமையை பிரதிபலிக்கிறது. 

    இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று இருந்தபோதிலும், 150க்கும் மேற்பட்ட பிரிக்ஸ் கூட்டங்கள், நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில், 20-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்றன. பிரிக்ஸ் நிகழ்ச்சி நிரலை விரிவாக்கவும் முயற்சித்தோம். பல விஷயங்களில் 
    பிரிக்ஸ்
     இந்த முறை சாதித்துள்ளது. நமது நீர்வளத்துறை மந்திரிகள் முதல் முறையாக நவம்பர் மாதம் சந்தித்து பேச உள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்றனர். 

    Next Story
    ×