search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் சாக்லெட்டுகளால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை.
    X
    திருப்பதியில் சாக்லெட்டுகளால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை.

    திருப்பதியில் சாக்லெட், பாதாம், முந்திரியால் தயாரிக்கப்பட்ட 2 அடி உயர விநாயகர் சிலை

    சாக்லெட்டுகளால் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
    திருப்பதி:

    திருப்பதி பொம்மள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி வித்தியாசமாக சிலைகள் தயாரிக்க முடிவு செய்தனர்.

    இதற்காக 2 அடி உயரத்தில் சாக்லெட் தயாரிக்கும் பொருட்களை கொண்டு சிலை தயாரிக்க ஏற்பாடு செய்தனர்.

    இதையடுத்து நேற்றுமுன்தினம், 18 கிலோ சாக்லேட் பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை கொண்டு 2 அடி உயரத்தில் விநாயகர் சிலை பணியை தொடங்கினர்.

    கடந்த 2 நாட்களாக சிலை செய்ய தொடங்கிய பணி நேற்று இரவு முடிவடைந்தது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ராமுடு மற்றும் பாபு கூறியதாவது:-

    அனைவரும் களிமண் மற்றும் வர்ணம் தீட்டப்பட்ட விநாயகர் சிலையை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாசு ஏற்படுகிறது.

    நாங்கள் மாசு இல்லாத சாக்லெட் விநாயகர் சிலை செய்து உள்ளோம். இந்த விநாயகர் சிலை நாளை தெருவில் வைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.

    இதையடுத்து பூஜைகள் முடித்து நாளை மறுநாள் விநாயகர் செய்யப்பட்ட சாக்லெட்டுகள் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    சாக்லெட்டுகளால் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.




    Next Story
    ×