search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிபா வைரஸ்
    X
    நிபா வைரஸ்

    கேரளாவில் பலியான சிறுவனுடன் தொடர்பில் இருந்த மேலும் 11 பேருக்கு நிபா வைரஸ்

    கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு காரணமான பறவைகள் மற்றும் வவ்வால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள விலங்குகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன்  நிபா வைரஸ் பாதிப்பால் கடந்த  வாரம் பலியானான்.

    இதையடுத்து மத்திய நோய் தடுப்பு அதிகாரிகள் குழுவினர் கோழிக்கோடு சென்று ஆய்வு மேற்கொண்டனர். சிறுவனின் வீடு மற்றும் அந்த கிராமம் முழுவதும் நோய் பரவலுக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

    பின்னர் இது தொடர்பாக அவர்கள் அளித்த  அறிக்கையில் பலியான சிறுவன் காட்டு பகுதிக்கு சென்று வவ்வால் கடித்து போட்ட பழங்களை தின்றிருக்கலாம் எனவும், இதன் காரணமாக நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

    நிபா வைரஸ் ஒரு கொடிய நோய் என்பதால், இந்த பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க பலியான சிறுவனுடன் தொடர்பில் இருந்தோர் பட்டியலை கேரள சுகாதாரத்துறையினர் தயாரித்தனர். இதில் சிறுவனுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்தது 265 பேர் என கண்டறிந்தனர்.

    அவர்களில் காய்ச்சல் அறிகுறி இருந்தோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் உள்ள ஆய்வகம் மற்றும் புனேவில் உள்ள  வைராலஜி ஆய்வகத்திற்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டது.

    கோப்புப்படம்

    67 பேரின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் 11 பேருக்கு
    நிபா வைரஸ்
    பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் உடனே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு  அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை அவர்களில் யாருக்கும் தீவிர பாதிப்பு எதுவும் இல்லை என்றும், அவர்கள் மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் 56 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. இது கேரள சுகாதாரத்துறையினருக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

    இதற்கிடையே கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு காரணமான பறவைகள் மற்றும் வவ்வால்களின்  மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள விலங்குகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.


    Next Story
    ×