search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    பவானிபூர் இடைத்தேர்தல்- நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்கிறார் மம்தா பானர்ஜி

    பவானிபூர் தொகுதியில் தனக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சோபன்தேவ் சட்டோபாத்யாய் கார்தகா தொகுதியில் போட்டியிடுவார் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால் அந்த கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். முதல்வராக பதவி ஏற்ற மம்தா பானர்ஜி 6 மாதத்திற்குள் மீண்டும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.-வாக வேண்டும். ‘

    முந்தைய தேர்தல்களில் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி தொடர்ந்து போட்டியிட்டு வென்றுள்ளார். எனவே, மீண்டும் பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக வேளாண் மந்திரியும், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வான சோபன்தேவ் சட்டோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானது.

    இந்நிலையில், பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பவானிபூர் தொகுதியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    பவானிபூர் தொகுதியில் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தை தொடங்கினார். சேத்லாவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பவானிபூர் தொகுதியில் வரும் 10ம் தேதி (நாளை மறுநாள்) வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக கூறினார். 

    பவானிபூர் தொகுதியில் தனக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சோபன்தேவ் சட்டோபாத்யாய் கார்தகா தொகுதியில் போட்டியிடுவார் என்றும், அவர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பார் என்றும் மம்தா தெரிவித்தார். 

    ‘சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குப்பதிவு நடந்த விதம் கடவுளுக்கு மட்டுமே தெரியும். மத்திய அரசு பொய் சொன்னது. இன்னும் என்னை வெல்ல முடியவில்லை. நந்திகிராமில் என் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னால் சதி இருந்தது. வெளியில் இருந்து 1000 குண்டர்கள் வங்காளத்தை தவறாக வழிநடத்த வந்தனர்’ என்று குற்றம்சாட்டினார் மம்தா.

    Next Story
    ×