search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நிபா வைரஸ்- தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு

    நிபா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்துகள் இல்லை. ஆனால் இதற்கான தடுப்பூசி மருந்தை இப்போது உருவாக்கி இருக்கிறார்கள்.
    புதுடெல்லி:

    கேரளாவில் ‘நிபா’ வைரஸ் தாக்கி 12 வயது சிறுவன் பலியாகி இருக்கிறான். மேலும் பலரை இந்த நோய் தாக்கி உள்ளது.

    உயிர் கொல்லி நோயான நிபா வைரஸ் மேலும் பரவி விடாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில்தான் தென்பட்டது. அது குரங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது தெரிய வந்தது.

    கேரளாவில் 2018-ம் ஆண்டும் இதே போல் நிபா வைரஸ் பரவியது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் அந்த நோய் பரவி இருப்பதால் கடும் அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது.

    நிபா வைரஸ்
    நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்துகள் இல்லை. ஆனால் இதற்கான தடுப்பூசி மருந்தை  இப்போது உருவாக்கி இருக்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள ஜென்னர் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அமெரிக்க தேசிய சுகாதார மையம் ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

    கோப்புப்படம்

    வைரசின் மரபணுவை பகுத்தாய்வு செய்து அதன் மூலம் இந்த தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதை 8 வகையான குரங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்து பார்த்தார்கள். அது நன்றாக வேலை செய்வது தெரிய வந்தது.

    ஆப்பிரிக்க பச்சை வகை குரங்கின் வைரசை இந்த தடுப்பூசி முழுமையாக அழிப்பதை காண முடிந்தது. சிரியா ஹேம்ஸ்டர் என்ற எலிக்கும் சோதனை செய்து பார்த்தார்கள். அதுவும் வெற்றிகரமாக வேலை செய்கிறது. இன்னும் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற இருக்கின்றன.

    அதிலும் வெற்றி கிடைத்தால் பயன்பாட்டுக்கு வரும். இந்த மருந்துக்கு ‘சாட் ஆக்ஸ் &1’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×