search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுக்கூட்ட மேடையில்  விவசாய சங்க தலைவர்கள்
    X
    பொதுக்கூட்ட மேடையில் விவசாய சங்க தலைவர்கள்

    விவசாயிகள் பிரமாண்ட பொதுக்கூட்டம்... உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவு

    முசாபர்நகரில் விவசாயிகளின் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சுமார் 8000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் விவசாயிகள் பாஜகவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்திவருகின்றனர்.

    அவ்வகையில், இன்று உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் பிரமாண்ட  பொதுக்கூட்டம் நடத்தினர். இதில், ராகேஷ் திகாயித் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர். உத்தர பிரதேச தேர்தலில் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தையும், பிரச்சாரத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தினர்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

    நமது போராட்டத்தை அரசாங்கம் புரிந்துகொண்டால் நன்றாக இருக்கும். இதுபோன்ற கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படும். தனியாருக்கு தாரைவார்ப்பதில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்யவேண்டும், என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயித் பேசினார்.

    விவசாயிகளின் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சுமார் 8000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக, மாநிலம் முழுவதும் இதுபோன்ற போராட்டங்களை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் தங்கள் செய்தியை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 27ம் தேதி அன்று அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×