search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜேஷ் தோபே
    X
    ராஜேஷ் தோபே

    மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை: மந்திரி ராஜேஷ் தோபே

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டத்தின்போது மக்கள் கூட்டத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விழாவை எளிமையான முறையில் கொண்டாடுங்கள்.
    மும்பை :

    நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் சில இடங்களில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக தலைநகர் மும்பையில் பாதிப்பு அதிகரிப்பது 3-வது அலை குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 10 நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் 10-ந் தேதி தொடங்குகிறது.

    சமீபத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு அடுத்த நாளில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    இதேபோல் மகாராஷ்டிராவிலும் நோய் பாதிப்பு பரவலாம் என வல்லுனர்கள் கூறி வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.

    இதற்கிடையே சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக புதிய ஊரடங்கு அறிவிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    வெகுவிரைவில் புதிதாக கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சாத்தியமில்லை. விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டத்தின்போது மக்கள் கூட்டத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விழாவை எளிமையான முறையில் கொண்டாடுங்கள்.

    கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. மக்கள் அவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×