search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவ்ஜோத் சிங் சித்து
    X
    நவ்ஜோத் சிங் சித்து

    சித்துவை சந்தித்து பேச ராகுல், பிரியங்கா மறுப்பு

    பஞ்சாப் மாநில மேலிட பொறுப்பாளர் ஹரீஷ்ராவத், சண்டிகருக்கு சென்று கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் அமரீந்தர்சிங்கையும் சந்தித்து பேசினார்.

    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக அமரீந்தர் சிங் உள்ளார். சமீபத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத்சிங் சித்து நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், கட்சி தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அமரீந்தர் சிங்குக்கு எதிராக சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.

    நவ்ஜோத்சிங் சித்து தனக்கு இரண்டு ஆலோசகர்களை நியமித்துக் கொண்டார். அவர்கள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து பஞ்சாப் மாநில மேலிட பொறுப்பாளர் ஹரீஷ்ராவத், சண்டிகருக்கு சென்று கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் அமரீந்தர்சிங்கையும் சந்தித்து பேசினார். மேலும் சித்துவின் ஆலோசகர்களின் நடவடிக்கைகளையும் கண்டித்தார்.

    இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் நவ்ஜோத்சிங் சித்து திடீரென்று டெல்லிக்கு சென்றார். அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்திக்க சென்றதாக தகவல் வெளியானது.

    ஆனால் நவ்ஜோத்சிங் சித்துவை சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்காகாந்தி மறுத்து விட்டதாக தெரிகிறது. அவர்கள் சித்துவுக்கு நேரம் ஒதுக்கி தரவில்லை. இதனால் ராகுல்-பிரியங்காவை சந்திக்காமல் டெல்லியில் இருந்து நவ்ஜோத்சிங் சித்து திரும்பினார்.

    பஞ்சாப் காங்கிரசில் பிரச்சினை நிலவி வரும் நிலையில் சித்துவை சந்திக்க ராகுல்-பிரியங்கா மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படியுங்கள்... கொரோனா அறிகுறி இருந்தால் தமிழகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

    Next Story
    ×