search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி
    X
    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி

    தேர்தலுக்கு பிந்தைய வன்முறை... சிபிஐ விசாரணையை எதிர்த்து அப்பீல் செய்தது மேற்கு வங்காள அரசு

    சிபிஐ அமைப்பானது, மத்திய அரசின் உத்தரவின் பேரில் செயல்படுவதால், நியாயமான விசாரணையை எதிர்பார்க்க வேண்டாம் என்று மேற்கு வங்காள அரசு கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஆனால், தேர்தலுக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் ஏற்பட்டன. இதில் மனித உரிமை மீறல்களும் நடந்தன. வன்முறைகள் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன. 

    இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள்
     தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டது. மாநில காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியது. தீவிர குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய தவறிவிட்டனர் அல்லது தீவிர குற்றங்களில் சிறிய குற்றங்களுக்கான முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும் உயர் நீதிமன்றம் கூறியது. 

    இதையடுத்து வன்முறை தொடர்பான விசாரணையை தொடங்கிய சிபிஐ, இதுவரை 30க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. 

    உச்ச நீதிமன்றம்

    இந்நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மேற்கு வங்காள அரசு சார்பில் 
    உச்ச நீதிமன்றத்தில்
     மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ இந்த வழக்கில் நியாயமாக விசாரணை நடத்தாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    சிபிஐ அமைப்பானது, மத்திய அரசின் உத்தரவின் பேரில் செயல்படுவதால், நியாயமான விசாரணையை எதிர்பார்க்க வேண்டாம் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்வதிலேயே சிபிஐ மும்முரமாக உள்ளது என்றும் அரசு தனது மனுவில் கூறி உள்ளது.

    Next Story
    ×