search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்
    X
    பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்

    எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது - ராஜ்நாத் சிங்

    ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது என பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
    சண்டிகர்:

    ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசியாவில் பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருகிறது. குறிப்பாக, தலிபான்களால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    தேசிய பாதுகாப்பு தொடர்பாக பஞ்சாப் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற விரிவுரை நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழ்நிலை நமது நாட்டின் பாதுகாப்பு குறித்த பல்வேறு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆப்கானிஸ்தான் நிலவரத்தை நமது அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அங்கு நிலவி வரும் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தேசவிரோத சக்திகள் ஊக்குவிக்கக் கூடாது என நமது அரசு விரும்புகிறது.

    ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்தார்.
    Next Story
    ×