search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்கிப்பிங் ஆடிய அனுராக் தாகூர்
    X
    ஸ்கிப்பிங் ஆடிய அனுராக் தாகூர்

    பிட்னஸ் நிகழ்ச்சியில் ஸ்கிப்பிங் ஆடி அசத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாகூர்

    பிட் இந்தியா செயலியானது ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் தேசிய விளையாட்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் பரிசு என்று மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறினார்.
    புதுடெல்லி:

    உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் பிட் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் ஆண்டு விழா இன்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர், ‘பிட் இந்தியா’ என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்தார். இந்த செயலி, உடற்பயிற்சி மற்றும் பிட்னஸ் தொடர்பான பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

    இந்நிகழ்ச்சியின்போது, உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் ஸ்கிப்பிங் ஆடி தனது உடற்திறனை வெளிப்படுத்தினார். அப்போது விழாவில் பங்கேற்றவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.


    ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் தேசிய விளையாட்டு தினத்தன்று, நாட்டு மக்களுக்கு இந்த செயலி அரசாங்கத்தின் பரிசு என்று அனுராக் தாகூர் கூறினார். பிட் இந்தியா செயலி, நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு அடையாளமாக இருக்கும் மேஜர் தயான் சந்திற்கு காணிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்கும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
    Next Story
    ×