search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயண் ரானே
    X
    நாராயண் ரானே

    உத்தவ்தாக்கரே குறித்து சர்ச்சை கருத்து - ரானே 2-ந் தேதி ஆஜராக போலீசார் உத்தரவு

    மராட்டிய முதல் மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே குறித்து நாராயண் ரானே சர்ச்சை அளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்.

    மும்பை:

    மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மந்திரியாக நாராயண் ரானே பொறுப்பு வகித்து வருகிறார்.

    சிவசேனா கட்சியில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய நாராயண் ரானே மராட்டிய முதல்வராக பதவி வகித்துள்ளார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து காங்கிரசில் இணைந்தார்.

    காங்கிரசில் இருந்தும் வெளியேறி மராட்டிய சுவாபிமான் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். பிறகு அந்த கட்சியை பா.ஜனதாவில் இணைத்தார். மேல்சபை எம்.பி.யான அவர் தற்போது மத்திய மந்திரியாக இருக்கிறார்.

    இந்த நிலையில் மராட்டிய முதல் மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே குறித்து நாராயண் ரானே சர்ச்சை அளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்.

    பா.ஜ.க. சார்பில் ராய்காட்டில் நடந்த பேரணியில் அவர் பேசும்போது, ‘ஒரு மாநிலத்தின் முதல்- மந்திரிக்கு (உத்தவ் தாக்கரே) எந்த ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றது என்பதுகூட தெரியாமல் இருப்பது வெட்கக் கேடான வி‌ஷயம். அவர் சுதந்திர தின விழாவில் உரையாற்றும்போது, நாடு சுதந்திரம் அடைந்த ஆண்டு எது என்று உதவியாளரிடம் கேட்டார். அந்த இடத்தில் நான் இருந்தால் அவருக்கு பலமான அறை கொடுத்திருப்பேன், என்றார். அவரது பேச்சுக்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து மத்திய மந்தரி நாராயண் ரானே மீது சிவசேனா கட்சி நாசிக் நகர போலீசில் புகார் அளித்தது. இதன் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் நாராயண் ரானே ஜாமீனில் விடுதலை ஆனார். நாராண் ரானே கைது நியாயமானது. ஆனால் காவல் விசாரணை தேவையில்லை என்று கூறி கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதோடு வருகிற 30 மற்றும் செப்டம்பர் 13-ந் தேதிகளில் ராய்காட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜனதா- சிவசேனா தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜாமீனில் விடுதலையான நாராயண் ரானே வருகிற 2-ந் தேதி 12 மணியளவில் நாசிக் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×