search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    வருமான வரித்துறை புதிய வலைத்தளம் இன்னும் சரியாகவில்லை... இன்போசிஸ் சிஇஓ-வுக்கு மத்திய அரசு சம்மன்

    வருமான வரித்துறை வலைத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் நீடிப்பது தொடர்பாக நாளை விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை எளிதாக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி வருமான வரித்துறையின் புதிய வலைத்தளம் (இ- பைலிங் போர்ட்டல்) தொடங்கப்பட்டது. இந்த வலைத்தளம் தொடங்கப்பட்டதில் இருந்தே, அதில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன.

    வலைத்தளத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. புதிய வலைத்தளம் திறக்கவில்லை என்று பலர் டுவிட்டரில் பதிவிட்டனர். சிலர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் கவனத்திற்கு இதை கொண்டு சென்றுள்ளனர். 

    வருமான வரித்துறை வலைத்தளம்

    இந்த வலைத்தளத்தை இன்போசிஸ்
     உருவாக்கியுள்ளது. அதைப் பராமரிக்கும் பொறுப்பும் இன்போசிஸ் நிறுவனத்திற்கு உள்ளது என்று கூறிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இந்த குறைபாடுகளை விரைவில் சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் தொடர்ந்து தொழில்நுட்ப சிக்கல் நீடிக்கிறது.

    இதையடுத்து, இன்போசிஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ), சலீல் பரேக்கிற்கு நிதியமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது. புதிய வருமான வரி தாக்கலுக்கான வலைத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் நீடிப்பது தொடர்பாக நாளை விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

    ‘புதிய இ- பைலிங் போர்ட்டல் தொடங்கப்பட்டு இரண்டரை மாதங்கள் ஆகியும் கூட, போர்ட்டலில் உள்ள குறைபாடுகள் ஏன் சரி செய்யப்படவில்லை? என்பது தொடர்பாக நிதி மந்திரியிடம் 
    இன்போசிஸ்
     சிஇஓ சலீல் பரேக் நாளை விளக்கம் அளிக்க வரும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று (21.08.2021) முதல் வருமன வரித்துறையின் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை’ என வருமான வரித்துறையின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வலைத்தள குறைபாடு குறித்து இன்போசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நந்தன் நீலகேணி வருத்தம் தெரிவித்ததுடன் கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என்று கூறியிருந்தார். மேலும் வாரந்தோறும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு விளக்க அறிக்கை அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×