search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதியுடன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள்
    X
    ஜனாதிபதியுடன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள்

    ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடம் பெற்றது. ஒலிம்பிக் போட்டி முடிந்து இந்திய வீரர், வீராங்கனைகள் நாடு திரும்பியுள்ளனர்.

    இந்நிலையில்  டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளித்தார்.  டெல்லி ராஷ்டிரபதி பவனில் வீரர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடிய விளையாட்டு வீரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். இந்த அணி ஒலிம்பிக் வரலாற்றில் நாட்டிற்காக அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளது. உங்கள் சாதனைகளால் முழு தேசமும் பெருமை கொள்கிறது என தெரிவித்தார். 
    Next Story
    ×