search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    ஆக்சிஜன் தேவை அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கு - உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

    தினசரி ஆக்சிஜன் தேவை 700 மெட்ரிக் டன்னாக உயர்ந்தால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
    மும்பை:

    மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா 2-வது அலை உச்சத்தை தொட்டது. இதையடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் 15-ந் தேதி முதல் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனின் அளவே ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை முடிவு செய்யும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    2-வது அலையின் போது தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த போது, ஆக்சிஜன் தேவையும் மிகவும் அதிகமாக இருந்தது. கூடுதலாக சுமார் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிற மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டது. தற்போது மாநிலத்தில் தினசரி 1,300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். இந்த நிலையில் ஒரு நாள் ஆக்சிஜன் தேவை 700 மெட்ரிக் டன்னாக உயர்ந்தால் (சுமார் 30 ஆயிரம் நோயாளிகளுக்கும் தேவைப்படும் ஆக்சிஜன்), மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

    மாநிலத்தில் வரும் 15-ந் தேதி முதல் இரவு 10 மணி வரை கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல், ஜிம், சலூன் ஆகியவற்றை திறந்து வைக்கலாம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே நாம் புதிய வகை வைரஸ், 3-வது அலைக்கு எதிராக விழிப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×