search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்எல்வி எப்-10
    X
    ஜிஎஸ்எல்வி எப்-10

    வெற்றிகரமாக வானில் சீறிப்பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்

    ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் மின்னணு பொருட்களை பாதுகாப்பதற்காக கூம்பு வடிவிலான முகப்பு பகுதியில் தனியாக வெப்பத்தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.  இதனை ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தி இன்று (வியாழக்கிழமை) காலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த ராக்கெட்டில் முதன்முறையாக வெப்பத்தில் இருந்து அதிக எடை கொண்ட செயற்கைகோள் மற்றும் அதில் உள்ள மின்னணு பொருட்களை பாதுகாப்பதற்காக ராக்கெட்டின் கூம்பு வடிவிலான முகப்பு பகுதியில் தனியாக வெப்பத்தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனால் திட்டமிட்ட இலக்கில் செயற்கைகோளை நிலை நிறுத்தும் வரை செயற்கைகோள்களை இந்த வெப்பத்தகடுகள் பாதுகாத்து கொள்கிறது. கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×