என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதியில் ஜூலை மாதம் ரூ.59 கோடி உண்டியல் வருவாய்
Byமாலை மலர்8 Aug 2021 9:41 AM GMT (Updated: 8 Aug 2021 9:41 AM GMT)
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அனைத்து கோவில்களில் சாமிக்கு அணிவிக்கப்பட்ட மலர் மாலைகள் கொண்டு ஊதுபத்திகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
திருப்பதி:
திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் பக்தர்களின் கேள்விகளுக்கு செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி பதிலளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பக்தர்கள் பலர் மிக குறைந்த எண்ணிக்கையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கொரோனா பரவல் நாடு முழுவதும் குறைந்தால் மட்டுமே இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தேவஸ்தானம் 5 ஆயிரம் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுக்கு எண்ணிக்கையை 8,000 ஆக உயர்த்தியுள்ளது.
திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக 6 இடங்களில் வாகன ஸ்கேன் செய்யும் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
அறைகளில் ஏற்படும் வசதி குறைவு குறித்து புகார்களை தெரிவிக்க 9989078111 செல்போன் எண்ணை பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம். அனுமன் அவதார இடம் திருமலையில் உள்ள அஞ்சனாத்திரி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆகாச கங்கையில் அனுமன் கோவில் உடன் தீம்பார்க் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் கருவறையில் தங்க முலாம் பூசும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, வழக்கம்போல் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் கைங்கரியங்கள் கல்யாண மண்டபத்தில் உற்சவருக்கு நடத்தப்படும்.

இந்த ஊதுபத்திகள் வரும் 15-ந் தேதி முதல் திருமலையில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
ஜூலை மாதம் 5.32 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். உண்டியல் காணிக்கை மூலம் ரூ.55.58 கோடியும், ஆன்லைன் மூலம் மூலம் ரூ.3.97 கோடியும், இ-உண்டியல் மூலம் ரூ.15 லட்சம் வருமானமாக கிடைத்துள்ளது. 33.26 லட்சம் லட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7.13 லட்சம் பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்டனர். 2.55 லட்சம் பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்றார்.

Next Story
×