search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரசாந்த் கிஷோர்
    X
    பிரசாந்த் கிஷோர்

    பஞ்சாப் மாநில முதல் மந்திரியின் முதன்மை ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த பிரசாந்த் கிஷோர்

    பிரசாந்த் கிஷோரின் அரசியல் ஆலோசனை நிறுவனம் ஐபேக் 9 தேர்தல்களில் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கியதில் 8 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. முதல்வர் அம்ரிந்தர் சிங் மற்றும்  சித்துவுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. அடுத்த ஆண்டில் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய நெருக்கடிக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது.

    இந்நிலையில் தற்போது முதலமைச்சரின் முதன்மை ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

    அம்ரிந்தர் சிங்

    மேலும், பொதுவாழ்கையிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்வதாகவும், அடுத்தகட்டம் குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    பிரசாந்த் கிஷோர் இந்தியாவின் சிறந்த அரசியல் ஆலோசகராகவும், தேர்தல் வியூக நிபுணராகவும்  அறியப்படுகிறார். 2017-ல் உத்தர பிரதேசம் மாநிலத்தில் காங்கிரசுக்கு அமைத்த இவரது வியூகம் அக்கட்சிக்கு கைகொடுக்கவில்லை.
    Next Story
    ×