search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெறிச்சோடிய சாலை
    X
    வெறிச்சோடிய சாலை

    கேரளாவில் கட்டுக்குள் வராத கொரோனா... இந்த பகுதிகளில் எல்லாம் மும்மடங்கு ஊரடங்கு

    சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 22 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா பரவலின் 2-வது அலை இன்னும் கட்டுக்குள் வராததால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனால் வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    கடைகள் திறக்கப்படாத நிலையில் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை கொண்டாட கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவிக்க அரசு முன்வந்தது.

    கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்

    இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை நீட்டித்து கேரள அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகின்றன.

    அதன்படி நாளை முதல் கடைகளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 22 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 1000 நபர்களில் 10க்கும் மேற்பட்டோருக்கு ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பகுதிகளில், கடைகளுக்கு மும்மடங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறினார்.

    இந்தியாவில் நேற்று 42,625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் 23,676 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    Next Story
    ×