search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவிகள்
    X
    பள்ளி மாணவிகள்

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

    சென்னை மண்டலத்துக்குட்பட்ட தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்து இருந்தனர்.
    புதுடெல்லி:

    கொரோனா தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

    அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். ஆனாலும் மாணவர்களுக்கு உள் மதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்து இருந்தனர்.

    பொது தேர்வுக்கு முன்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

    சிபிஎஸ்இ

    இந்தநிலையில் மத்திய கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவை இன்று வெளியிட்டது. மாணவ-மாணவிகள் results.nic.in., cbse.gov.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

    இது தவிர digilocker, unmang ஆகிய செயலிகள் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    சென்னை மண்டலத்துக்குட்பட்ட தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்து இருந்தனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் தங்களுடைய பதிவு எண்ணை ஆன்லைனில் பதிவு செய்து மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


    Next Story
    ×