search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் கோபுரத்தில் இருந்து மீட்கப்பட்ட சுரிந்தர் பால்
    X
    செல்போன் கோபுரத்தில் இருந்து மீட்கப்பட்ட சுரிந்தர் பால்

    135 நாட்களாக செல்போன் கோபுரத்தின் மீதேறி போராடியவர் - கோரிக்கைகளை ஏற்ற அரசு

    பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் மாற்றங்களை மேற்கொள்ளத் தயார் என அரசின் அறிவிப்பையடுத்து செல்போன் கோபுரத்தில் இருந்தவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதில் இ.டி.டி. எனும் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இதனிடையே ஏற்கனவே வேலையில்லாமல் இருப்பதாக இப்பயிற்சி முடித்த ஆசிரியர்கள் கடந்த ஆறு மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.

    ஆட்சேர்ப்பில் தொடக்க ஆசிரியர் பயிற்சி (இ.டி.டி) மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) ஆகியவைகளில் தகுதியானவர்களுக்கே முன்னுரிமை என்று பஞ்சாப் பள்ளிக் கல்வித் துறை ஜூலை மாதம் அறிவித்திருந்தது.

    இதை அமல்படுத்த பஞ்சாப் மாநில தொடக்கக் கல்வி குழு ’சி’ சேவைகளின் விதிகளில் திருத்தம் மேற்கொண்டு நடைமுறைக்கு வரும் என்று கல்வித் துறை செயலாளர் க்ரிஷன் குமார் தெரிவித்திருந்தார்.

    மேலும், காலியாக உள்ள 12,00 ஆசிரியர் பணியிடங்களையும் பயிற்சி முடித்த ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும், உச்சபட்ச வயது வரம்பை 42 ஆக அதிகரிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

    அப்போராட்டக்காரர்களில் ஒருவர் தான் சுரிந்தர் பால். இவர் கடந்த 135 நாட்களாக இதற்காக செல்போன் கோபுரத்தின் மீதேறி போராடி வந்தார். அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக கூறியதைத் தொடர்ந்து இன்று அவர் காவல்துறையின் உதவியுடன் பத்திரமாக கீழிறக்கப்பட்டார்.

     பின் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
    Next Story
    ×