search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    2 மாதங்களுக்கு ஒரு தடவை டெல்லிக்கு செல்வேன்- மம்தா பானர்ஜி

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க இப்போதே வியூகம் வகுக்க வேண்டும் என்று கூறி வரும் மம்தா பானர்ஜி சமீபத்தில் டெல்லி சென்று சோனியா உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார்.
    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்து உள்ளார்.

    பா.ஜனதா ஆட்சியை அகற்ற யார் தலைமையையும் ஏற்க தயார் என்று அறிவித்து உள்ள அவர் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளார்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க இப்போதே வியூகம் வகுக்க வேண்டும் என்று கூறி வரும் மம்தா பானர்ஜி சமீபத்தில் டெல்லி சென்று சோனியா உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார்.

    ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோருடனும் பேச்சு நடத்தினார். தி.மு.க. எம்.பி. கனிமொழியுடனும் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார்.

    இந்தநிலையில் மீண்டும் டெல்லி செல்ல மம்தா பானர்ஜி ஆயத்தம் ஆகி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனது 4 நாள் டெல்லி பயணம் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தி உள்ளேன். டெல்லி பயணம் வெற்றி பெற்றதாக கருதுகிறேன்.

    இந்த வெற்றியை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும். இதற்காக நான் 2 மாதங்களுக்கு ஒரு தடவை டெல்லிக்கு வருவேன்.

    அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

    தற்போது ஜனநாயகத்துக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தையும் முறியடித்தே தீருவோம்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
    Next Story
    ×