search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதியில் கொரோனா 3-வது அலை தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு

    திருப்பதி கோவிலில் கொரோனா 3-வது அலை அச்சத்தை கருத்தில் கொண்டு இலவச தரிசனம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,787 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,107 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 20 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    கொரோனாவால் இதுவரை 19 லட்சத்து 62 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு 19,27,438 பேர் குணமடைந்துள்ளனர்.

    தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில், மருத்துவமனைகளில் 21, 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மொத்தம் கொரோனா 2-வது அலைக்கு இதுவரை 13,332 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பதியில் கொரோனா 3-வது அலை அச்சம் ஏற்பட்டுள்ளது. திருப்பதி மாநகராட்சி ஆணையாளர் கிரிஷா வார்டுகளில் திடீர் ஆய்வு செய்தார்.

    கொரோனா 3-வது அலை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் தங்கள் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

    ஏற்கனவே திருப்பதி கோவிலில் கொரோனா 3-வது அலை அச்சத்தை கருத்தில் கொண்டு இலவச தரிசனம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×