search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவேக்சின் தடுப்பூசி
    X
    கோவேக்சின் தடுப்பூசி

    கோவேக்சின் இறக்குமதி அங்கீகாரம் ரத்து- பிரேசில் நடவடிக்கை

    கோவேக்சின் தடுப்பூசியின் 40 லட்சம் ‘டோஸ்’ இறக்குமதிக்கான அங்கீகாரத்தை பிரேசில் ரத்து செய்துள்ளது.
    ஐதராபாத்:

    இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி வினியோகித்து வருகிறது.

    கொரோனா வைரஸ்

    இந்த தடுப்பூசியின் 40 லட்சம் ‘டோஸ்’ இறக்குமதிக்கான அங்கீகாரத்தை பிரேசில் ரத்து செய்துள்ளது.

    இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனை அங்கீகாரத்தை ரத்து செய்ததுடன், பாரத் பயோடெக் நிறுவனத்தின் அவசர கால பயன்பாட்டு அங்கீகார விண்ணப்பத்தையும் பிரேசில் ரத்து செய்த நிலையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இதற்கான முடிவை பிரேசில் நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பான அன்விசா எடுத்துள்ளது.




    Next Story
    ×