search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகா வைரஸ்
    X
    ஜிகா வைரஸ்

    கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

    கேரளாவில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் மேலும் 10 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் வைராலஜி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளின் ஆரோக்கியமும் தற்போது திருப்திகரமாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×