search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் மேலும் 43,654 பேருக்கு கொரோனா

    கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 254, கேரளாவில் 156, ஒடிசாவில் 60 பேர் உள்பட நேற்று 640 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,22,022 ஆக உயர்ந்தது.
    புதுடெல்லி:

    மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 84 ஆயிரத்து 605 ஆக உயர்ந்தது.

    கேரளாவில் கடந்த 50 நாட்களில் இல்லாத அளவில் நேற்று பாதிப்பு 22,129 ஆக உயர்ந்தது. நேற்று நாடு முழுவதுமான பாதிப்பில் கேரளாவில் மட்டும் 50.6 சதவீதம் பதிவாகி இருக்கிறது.

    கடந்த 25-ந் தேதி நாடு முழுவதும் 11.54 லட்சம் மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டிருந்தது. ஆனால் மறுநாள் பரிசோதனை எண்ணிக்கை 17.20 லட்சமாக உயர்ந்தது. இதுவும் தினசரி பாதிப்பு திடீரென இந்த அளவு உயர ஒரு காரணம் ஆகும்.

    நாடு முழுவதும் கடந்த 4 வாரங்களில் தொற்று பாதிப்பு சதவீதம் 22 மாவட்டங்களில் 10-க்கும் மேல் இருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. இதில் கேரளாவில் 7, மணிப்பூரில் 5, மேகாலயாவில் 3, மகாராஷ்டிராவில் 2 மாவட்டங்கள் அடங்கும். மேலும் 62 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ தாண்டுவதும் தெரிய வந்துள்ளது.

    கடந்த மே 5 முதல் 11-ந் தேதி வரையிலான நிலவரப்படி தினசரி பாதிப்பு 3.87 லட்சத்தில் இருந்தது. தற்போது தினசரி பாதிப்பு 38 ஆயிரமாக சரிந்துள்ளது. 2½ மாதங்களில் தினசரி பாதிப்பு பெருமளவு குறைந்திருப்பது நம்பிக்கையை அளித்துள்ளது.

    கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 254, கேரளாவில் 156, ஒடிசாவில் 60 பேர் உள்பட நேற்று 640 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,22,022 ஆக உயர்ந்தது.

    இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,31,859, கர்நாடகாவில் 36,437, தமிழ்நாட்டில் 33,966, டெல்லியில் 25,046, உத்தரபிரதேசத்தில் 22,754 பேர் அடங்குவர்.

    நோயின் பிடியில் இருந்து நேற்று 41,678 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 6 லட்சத்து 63 ஆயிரத்து 147 ஆக உயர்ந்தது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3.98 லட்சத்தில் இருந்து தற்போது 3,99,436 ஆக உயர்ந்தது.

    கோப்புப்படம்


    இன்று காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 40,02,358 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 44.61 கோடியாக உயர்ந்தது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று நாடு முழுவதும் 17,36,857 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 46.09 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×