search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெகுல் சோக்சி
    X
    மெகுல் சோக்சி

    இந்திய உளவு துறையினர் என்னை கடத்தி அடித்து துன்புறுத்தினர் - மெகுல்சோக்சி குற்றச்சாட்டு

    ஆன்டிகுவாவில் நான் எனது நண்பர் பார்பரா ஜெராபிகா வீட்டில் இருந்த போது ‘ரா’ அமைப்பை சேர்ந்த 2 பேர் என்னை கடத்தி சென்று தாக்கினார்கள் என்று மெகுல்சோக்சி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    பிரபல வைர வியாபாரி மெகுல்சோக்சி. மும்பையை சேர்ந்த இவர் ரூ.13 ஆயிரத்து 500 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டார்.

    வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல்சோக்சி மும்பையில் இருந்து ஆன்டிகுவாவுக்கு தப்பி சென்றார். அங்கு குடியுரிமை பெற்றிருந்த அவர் கடந்த மே 23-ந் தேதி டொமினிகா நாட்டுக்கு சென்றார். சட்ட விரோதமாக குடியிருந்ததாக அந்நாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

    மருத்துவ சிகிச்சைக்காக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மெகுல்சோக்சி டொமினிகா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதை ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தனி விமானத்தில் ஆன்டிகுவாவுக்கு திரும்பினார்.

    இந்தநிலையில் இந்திய உளவு அமைப்பான ‘ரா’வை சேர்ந்தவர்கள் தன்னை கடத்தி அடித்து துன்புறுத்தியதாக மெகுல்சோக்சி குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக தனியார் டெலிவி‌ஷனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    ஆன்டிகுவாவில் நான் எனது நண்பர் பார்பரா ஜெராபிகா வீட்டில் இருந்த போது ‘ரா’ அமைப்பை சேர்ந்த 2 பேர் என்னை கடத்தி சென்று தாக்கினார்கள். அந்த 2 பேரும் ‘ரா’ ஏஜென்டின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவை சேர்ந்தவர்கள்.

    நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் உங்களை விசாரணைக்கு அழைத்து செல்கிறோம் என்று கூறி என்னை அவர்கள் கடத்தி சென்றார்கள். என்னை அடித்து துன்புறுத்தினார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×