search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்
    X
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்- களத்தில் பெண்கள்

    டிராக்டர் பேரணியில் எந்த அமைச்சர்களையும் அனுமதிக்க மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பிஜேந்திர சிந்து பேசியுள்ளார்.
    புதுடெல்லி :

    டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான மீண்டும் விவசாயிகள் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடந்துவருகின்றன.

    இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

    திருத்தியமைக்கப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்கள் கருப்புச் சட்டமாகவே பார்க்கிறோம் என்று போராட்ட களத்தில் இருந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இச்சட்டங்களை நாங்கள்  ஏற்றுக் கொள்வதாக இல்லை. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என எல்லா தரப்பினரிடமும்  இந்த வேளாண் சட்டங்களைக் குறித்த கேள்விகள் இருந்துகொண்டே உள்ளன.

    ஹரியானாவின் ஜிந்த் மாவட்ட விவசாயிகள், வரும் சுதந்திர நாளன்று டிராக்டர் பேரணியை நடத்துவார்கள். அதில், எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் பங்குபெற விடமாட்டோம் என்று விவசாய சங்க தலைவர் பிஜேந்திர சிந்து தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×