search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகா வைரஸ்
    X
    ஜிகா வைரஸ்

    மேலும் 2 பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு - கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது

    ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா வைரஸ் 2வது அலையின் பாதிப்பு முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது.  நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொசுக்களின் வழியே பரவ கூடிய இந்த தொற்றுக்கு கேரளா அதிக இலக்காகி உள்ளது.

    இந்நிலையில், கேரளாவில் மேலும் இரு பெண்கள் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அங்கு இந்த வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46 ஆகியுள்ளது. அவர்களில் 5 பேர் தற்போது பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

    புதிதாக ஜிகா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 2 பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மாநில அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×